நாமல் ராஜபக்ஷ 18ம் திகதி வரை விளக்கமறியலில்

412 0

4674-namal-goes-live424039625கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறை பிரிவினரால் அவர் இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டார்.

கோடி ரூபாய்கள் தொடர்பில் உரிய கணக்குகளை சமர்ப்பிக்காமைக்காக அவர் இன்றையதினம் குறித்த காவற்துறை பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். கொழும்பு கோட்டையில் பாரிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவின் க்றிஸ் என்ற நிறுவனம் 4.3 ஏக்கர் காணியை 99 வருடங்களுக்கு குத்தகைக்குப் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் குப்தாவிடம், ரக்பி விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக, குறிப்பிட்ட விளையாட்டு கழகம் ஒன்றுக்கு 7 கோடி ரூபாய்களை வழங்குமாறு நாமல் ராஜபக்ஷ அழுத்தம் கொடுத்துள்ளார்.

இதன்அடிப்படையில் 7 கோடி ரூபாய் வழங்கப்பட்ட போதும், அது குறிப்பிட்ட விளையாட்டுக் கழகத்தை சென்றடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதேநேரம் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை கோரி அவரது சட்டத்தரணிகள் மனுத்தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ;அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ இன்று நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையானார். தாழ்நில அபிவிருத்தி சபைக்குரிய 90 மில்லியன் ரூபா நிதியை கொண்டு டீ. எஸ் ராஜபக்ஷ கேந்திரநிலையத்தை நிரமாணித்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையேஇ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும் நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நாமல் ராஜபக்ஸவும் நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை பிரிவில் முன்னிலையாகினார்.

இதேவேளைஇ சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான குமார வெல்கமவும் நிதி மோசடிகளுக்கு எதிரான காவல்துறை பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளுக்கு தீர்வையற்ற முறையில் மேலதிக உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குமார் வெல்கம அழைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் தற்போது வாக்குமூலங்கள் பெறப்பட்டுவருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.