திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

381 0

திவயினயுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்பதை மீண்டும் ஒருதடவை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஞாயிற்றுக்கிழமை திவயின வார இறுதிப் பத்திரிகையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இன்னும் 9 மாதங்களுக்குள் சர்வதேச நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படும் என தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது.

இதனை முற்றாக மறுத்த சிறீலங்கா அதிபர், ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அப்பத்திரிகை நிறுவனத்தைக் கடிந்துகொண்டார். கண்டி பேராதனையிலுள்ள ஸ்ரீ சுபோதாராம விகாரையில் நேற்றைய தினம் வத்தேகம ஸ்ரீ தம்மாவாச தேரரின் ஞனன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், அங்கு கூடியிருந்த பௌத்த பிக்குகள், அரசியல் வாதிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சிறீலங்கா அதிபர், யுத்த குற்ற நீதிமன்றம் இன்னும் 9 மாதங்களில்வெளிநாட்டு நீதிபதிகள் வருகின்றனர் என்ற தலைப்பில் வெளியான ஞாயிறு திவியின பத்திரிகையின் பிரதியொன்றை காண்பித்து இவ்வாறான பொய்யான செய்திகளையும் மக்களை குழப்பும் செய்திகளையுமே ஊடகங்கள் வெளியிடுவதாக குற்றம்சாட்டினார். யுத்தக் குற்றம் – 9 மாதங்களில் சர்வதேச நீதிபதிகள் வருகை, இந்தச் செய்தியை நான் முற்றாக மறுக்கின்றேன்.

வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். நம் நாட்டு நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகளை வைத்து பணிகளை முடிப்பதற்கு எமது அரசியல் யாப்பில் எந்தவித வாய்ப்புக்களும் இல்லை.அப்படியாயின் அரசியல் யாப்பினை மாற்றி எழுதவேண்டும். அதனை மாற்றி எழுதுவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன். இந்தச் செய்தியானது நாட்டின் மக்களிடையே குழப்பத்தை உருவாக்குகின்றது.

ஒன்பது மாதங்களில் யுத்தக்குற்ற விசாரணை தொடர்பிலான நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட போவதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு யுத்தக் குற்ற நீதிமன்றம் தொடர்பில் எவ்வித அறிவுறுத்தலையும் எமக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.