வழக்கத்துக்கு மாறாக ஜோ பைடனுடன் நீண்ட நேரம் விவாதித்த போப் ஆண்டவர்

148 0

ஜோ பைடன் இதற்கு முன்னர் 3 முறை போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதற்கு பிறகு போப் ஆண்டவரை சந்தித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறும் ஜி20 மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 5 நாள் பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக அவர் மனைவி ஜில் பைடனுடன் வாடிகன் நகருக்கு சென்று போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்தார்.

அப்போது போப் ஆண்டவர் அவர்கள் இருவரையும் புன்முறுவலுடன் வரவேற்று உபசரித்தார். அதன் பின்னர் போப் ஆண்டவர் ஜோ பைடனை மட்டும் தனது நூலகத்துக்கு அழைத்து சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வழக்கத்துக்கு மாறாக நீண்ட நேரம் நீடித்தது. அதன்படி இருவரும் 75 நிமிடம் வரை தங்களின் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.

கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம், வறுமை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தாக தெரிகிறது. ஜோ பைடன் இதற்கு முன்னர் 3 முறை போப் ஆண்டவர் பிரான்சிசை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஆனால் அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆனதற்கு பிறகு போப் ஆண்டவரை சந்தித்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.