இலங்கையில் சிறுவர்கள் – இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படும் வீதம் அதிகரிப்பு!

243 0

நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மன ரீதியில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ராகம போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ சுகாதார நிபுணருமான வைத்தியர் மியு சந்திரதாச நேற்று (29) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.

தற்காலத்தில் சிறுவர்களும், இளைய சமுதாயத்தினரும் டிஜிட்டல் திரைக்கு அடிமையாகியுள்ளமையே இதற்கு காரணமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.