சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸ் அவர்களிடம் ரி.ஐ.டி விசாரணை!

502 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் சமூக செயற்பாட்டாளரான  கனகசபை விமலதாஸ் அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்றைய தினம்(28) சுமார் நான்கரை மணி நேரமாக விசாரணைகளை நடத்தியுள்ளனர். நேற்றைய நாளில்(28) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்காக வருகை தருமாறு குறித்த சமூக செயற்பாட்டாளர் கனகசபை விமலதாஸ் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம்(28) அவர் வவுனியாவில் விசாரணைக்காக சென்ற நிலையில் சுமார் நான்கரை மணி நேரமாக குறித்த நபரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் இவருடைய முகநூல் மற்றும் வைபர் வட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் இவர் விடுதலைப் புலிகளின் தொடர்பாக பதிவிட்ட பதிவுகள் தொடர்பிலும் இவரது சமூக செயற்பாட்டு அமைப்பு ஒன்று தொடர்பிலும் பல மணி நேரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கனகசபை அவர்கள் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இலக்கு வைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.