இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்தித்த சம்பந்தன்!

214 0

இன்று மாலை 4.00 மணியளவில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்ளே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தனை, திரு.சம்பந்தனுடைய கொழும்பு இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் தூதரகத்தின் முதலாவது செயலாளர் திருமதி.பானு பிரகாஷ் அவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய திரு.ம.ஆ.சுமந்திரனும் கலந்துகொண்டனர்.

திரு. சம்பந்தனுக்கு தங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் பல முக்கிய விடயங்கள் குறித்து திரு.சம்பந்தனுடன் உரையாடினார். இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு, மீனவர் பிரச்சினை என்பவையும் இதிலடங்கும். வடக்கு கிழக்கில் இந்திய முதலீடுகள், உதவித் திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டன. மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவோடு சந்திப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது.