புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மறைத்து வைத்திருந்தாகத் தெரிவித்து ஒரு தொகுதி வெடிபொருட்களை பொலிஸ் விஷேட அதி ரடிப் படையினர் நேற்று மீட்டுள்ளனர்.கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
60 மி.மீ. மோட்டார் எறிகணை மற்றும் இனங்காணப்படாத 21 வெடிகுண்டுகள் என்பன குறித்த பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

