சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டம், பூநகரி இரணைதீவில் குடியேறியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரணைதீவில் மக்கள் குடியேறிய உடன் புநகரி பிரதேச செயலகத்தினால் குடிநீர்த் திட்டம் ஒன்று தொடங்கப்பட்ட போதும் அத்திட்டமானது தற்போது செயலிழந்து காணப்படுகின்றது.
இதன் காரணமாக சுத்தமான குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் நெருக்கடி நிலைமை காணப்படுவதாகவும், நீண்ட தூரம் சென்றே குடிநீரினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே பூநகரி பிரதேச செயலகம், மற்றும் மாவட்டச் செயலகம் இப்பிரச்சனைக்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

