கொரோனா தாக்கம்: சீன நகரத்தில் ஊரடங்கு அமல்

355 0

சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் மக்கள் அவசரநிலை தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரம் லான்சூ. இங்கு நேற்று முன்தினம் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கடந்த 18-ந் தேதி முதல் மொத்தம் 39 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அவசரநிலை தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு வளாகங்களில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிச்சீட்டு முறை நடைமுறைபடுத்தப்படுவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.