சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

233 0

வருகிற மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்கினார்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசும்போது, தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இந்த ஆட்சியில் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துள்ளது.

தற்போது அ.தி.மு.க.வினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி பயமுறுத்த நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் அச்சப்பட மாட்டார்கள்.
அதிமுக

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் பல தில்லுமுல்லு நடத்தி வெற்றி பெற்றுள்ளனர். வருகிற மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என கூறி ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கூட்டத்தில் சசிகலா பற்றி பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பகுதி கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.