புதுச்சேரி துறைமுகத்தில் தற்சமயம் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. மேலும், காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட இருக்கிறது.
மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

