மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறும் அரச உத்தியோகத்தர்கள், தமது மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லாமல் தீர்க்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சமூக அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக அம்பாறையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும். ஒரு நாள் நான் மட்டக்களப்புக்கு சென்ற போது, ஏறாவூர் பிரதேச சபையில் நடந்த ஒரு சம்பவத்தை கண்டு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்.
“இரண்டு வருடங்களாக எனக்கு அந்த பிரச்சினை உள்ளது. முடிவெடுப்பதில் கட்சி பேதமின்றி, நாம் ஒருபோதும் பாரபட்சம் காட்டக்கூடாது” என்றார்.
அம்பாறை மாவட்டச் செயலாளர் எம்.எல்.பண்டாரநாயக்க, ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க, அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.

