கோடரி வெட்டில் முடிந்த குடும்ப தகராறு

262 0

இளவாலை – உயரப்புலம் பகுதியில், நேற்று (26) இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலேயே, கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்