ஹெரோயினுடன் நால்வர் கைது

206 0

கொழும்பு, முவதோர உயன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12, பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மருதானை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாளிகாகந்தை பிரதேசத்தை சேர்ந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு, கிராண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 05 கிராம் 770 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.