ஹங்வெல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அருகில் இருந்து எரிந்து நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொட பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று (09) மாலை முதல் குறித்த விடுதியில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

