பதுளை ஹெலி-எல பகுதியிலுள்ள எல்ல நீர்வீழ்ச்சியை பார்க்கச் சென்ற இரு இளைஞர்கள், நீர்வீழ்ச்சியின் மேல் பகுதியிலிருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்வனர்த்தத்தில் வீரகெட்டிய, தெஹியத்தகண்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளுடைய நபர்களே உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

