4 வயது சிறுவர்களுக்கும் கட்டாயம் தலைக்கவசம்

315 0

201607101041293293_Central-Government-plan-to-4-year-old-children-compulsory_SECVPFமோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.ஆனால் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லப்படும் சிறுவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்வது குறித்து எந்த சட்ட பிரிவிலும் தெரிவிக்கப்படவில்லை.

சாலை விபத்துக்களில் சிறுவர்களின் இறப்பு விகிதம் அதிகம் இருப்பதை புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 12,500 சிறுவர்கள் பலியானார்கள். அவர்கள் 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். பெரும்பாலோனார் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இறந்தனர்

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.

இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சில திருத்தங்களை செய்து இருக்கிறது. மேலும் இந்த திருத்தங்களை மற்ற அமைச்சகங்களுக்கு அனுப்பி கருத்து கேட்டுள்ளது.

வருகிற 18-ந்தேதி தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இந்த சட்டம் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதும் சிறுவர்களுக்கு ஹெல்மெட் அணிவிக்காமல் மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.