எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் தெரிவிப்பு

232 0

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.