தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழியங்கும் பென்ஸ்கைம் தமிழாலயத்தால் கெசன் மாநிலத் தமிழாலயங்களையும் அயற் தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
04.09.2021 அன்று தேசியக் கொடியேற்றலோடு தொடங்கிய விளையாட்டுப் போட்டி யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினது விதிகளின் கீழ் நடாத்தப்பட்ட போட்டிகளிற் தமிழாலய மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்தோடு பங்பற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். கொரோனாப் பெருந்தொற்றால் மக்களுக்கும் மாணவர்களுக்கும் முடங்கியிருந்த சூழலில் அவர்களது உடல் உளப்பாங்கினை மேம்படுத்தவும் உற்சாகத்தை ஏற்படுத்தவுமாகச் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டுப் போட்டிகள் நடைபெற்றமை சிறப்பாகும். நிறைவாக தாயகவிடுதலை மீதான நம்பிக்கைப் பாடலோடு போட்டிகள் நிறைவுற்றன.































