யேர்மன் தலைநகரில் நடைபெற்ற தியாக தீபம் லெப்ரினன்ட் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

278 0

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்க்காக தனது உயிரை ஈகம் செய்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் பேர்லின் நகரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுக்கல் அமைந்துள்ள இடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இத் தருணத்தில் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் மற்றும் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்த ஈழத்து இசைத்சொத்து இசைக்கலைமாமணி வர்ணராமேஸ்வரன் அவர்களின் நினைவுப்பதிவுகளுடன் சுடர் ஏற்றப்பட்டு மலர் மற்றும் அகவணக்கம் முன்னெடுக்கப்பட்டது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் தொடர்பான நினைவுரையுடன் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக பேர்லின் மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு குமணன் அவர்களின் உரையும் இடம்பெற்றது. நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

சனிக்கிழமை அன்று பேர்லின் தமிழாலயத்திலும் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மாணவசமூகத்தினரால் அகவணக்கம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.