கிளிநொச்சியில் சந்தையில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

52 0

விவசாயி ஒருவர் சந்தைக்குள் விழுந்து மரணமடைந்த சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. விவசாயி ஒருவர் தனது தோட்டத்து மரக்கறிகளை விற்பனைக்குக் கொண்டு சென்ற வேளை நேற்று தர்மபுரம் சந்தைப் பகுதியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் வசித்துவரும் பழனி யாண்டி மகேந்திரம் (வயது-66) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் தருமபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேதப் பரிசோதனைக் காக கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.