லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 180 குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (23) உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த மற்றும் வறுமைக்குட்பட்ட குடும்பங்களுக்கே இந்த உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், ஞானம் அறக்கட்டளையின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


