மாற்றுத் திறனாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் திறப்பு

200 0
வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் எண்ணக்கருவுக்கு அமைவாக, அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறளாளிகளுக்கான வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையம் வெகுசன ஊடக அமைச்சரின் தலைமையில், நேற்று (23) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

மாற்றுத் திறளாளிகள் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் பிரதிநிதிகளால் இக்கேந்திர நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இக்கேந்திர நிலையத்தினை உருவாக்குவதற்கான அடிப்படை காரணமாக அமைந்தது, இலங்கையில் மாற்றுத் திறளாளிகளின் விசேட தேவைகளை துரிதமாக, எவ்வித தடையுமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கிலேயாகும். அதற்கு நிகராக மாற்றுத்திறனுடைய பிரஜைகளின் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்ட விசேட அப்லிகேஷன் (APP) ஒன்றும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரை நிகழ்த்திய வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, இன்றைய தினத்திற்கு இலங்கை வரலாற்றில் புதியதொரு அர்த்தம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். சர்வதேச சைகைகள் மொழி தினமான இன்று (செப்டெம்பர் 23) இலங்கையில் அங்கவீனமடைந்துள்ள சகோதர பிரஜைகளுக்காக இதுவரை கிடைக்காத உரிமைகளை பெற்றுக் கொடுக்கும் செயன்முறையில் ஓர் திருப்புமுனையாக இதனை குறிப்பிட முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தினை தயாரிக்கும் சந்தர்ப்பத்தில் மாற்றுத்திறளாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அவர்களின் உரிமைகளை மீள பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடலில் தானும் பங்குகொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தனக்கு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொற்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியின் வழிகாட்டலின் பிரகாரம் இயலாமையுடைய சகோதர பிரஜைகளின் உரிமைகளை உயரிய மட்டத்தில் நிறைவேற்றும் பயணமொன்றை மேற்கொள்ள தான் எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

அமைச்சரவர்கள் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இராச்சியமொன்றில் அல்லது சமூகமொன்றில் உயரிய நாகரிமான வலுவான குறிகாட்டிகளில் ஒன்றாக தமது பிரஜைகளில் மாற்றுத்திறன் கொண்ட சகோதர பிரஜைகளுக்கு உயரிய கௌரவமளிப்பது கருதப்படுகின்றது. கல்வி போன்ற பல துறைகளில் இச்சகோதர பிரஜைகளின் சம உரிமைகளை உறுதி செய்வதற்காக புதிய செயன்முறைகளை துரிதமாக செயற்படுத்த வேண்டியுள்ளது. மாற்றுத்திறன் கொண்ட சகோதர பிரஜைகளின் உடலியல் மற்றும் மனநலம் சார்ந்த ஆரோக்கியத்தினையும் ஒன்றாக பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பாகும்.

மாற்றுத்திறன் கொண்ட சகோதரர்களின் மனம் நோகாத வண்ணம் மொழியினை பயன்படுத்துவது தொடர்பில் ஊடக துறைக்கும் விசேட பொறுப்பு சுமத்தப்படுகின்றது. வெகுசன ஊடக அமைச்சின் ஒருங்கிணைப்பில் கேந்திர மத ;திய நிலையல் திறந்து வைக்கப்படுவது மாற்றுத்திறன் கொண்ட சகோதர பிரஜைகளின் சம உரிமைகளை பூரணத்துவப்படுத்தும் செயற்பாடுகளின் ஆரம்பம் மாத்திரமே என தெரிவித்த அமைச்சர், சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் சைகை மொழியில் இன்றிலிருந்து செய்தியறிக்கை ஒளிபரப்பாகின்றது என்றும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அவர்கள் உரையாற்றுகையில், உயர்ந்த மனிதாபிமான பணியொன்றிற்கு பங்களிப்பு செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தமை தொடர்பில் தான் பெரிதும் மகிச்சியடைவதாக தெரிவித்தார். பிறப்பிலோ அல்லது பிறப்பின் பின்னரோ அங்கவீனமடைந்துள்ள எம்முடைய சகோதர பிரஜைகளுக்கு உரிய மதிப்பையும் சம அவகாசத்தினையும் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தைப் போன்று ஏனைய பிரஜைகளதும் விசேட பொறுப்பாகும். மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள வெகுசன ஊடக ஒருங்கிணைப்பு கேந்திர நிலையத ;திற ;கு அவசியமான பௌதீக மற்றும் மனித வளங்கள் அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

மாற்றுத்திறளாளிகள் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் தலைவி திருமதி. ரசான்ஜலி பதிரகே கருத்து தெரிவிக்கையில், மாற்றுத்திறன் கொண்ட பிரஜைகளுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினை மனதார பாராட்டுவதாக தெரிவித்தார். இலங்கையில் 16 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அங்கவீனமுற்றவர்களாக காணப்படுவதாக குறிப்பிட்ட அவர் அதில் நூற்றுக்கு 05 வீதமானவர்கள் பெண்கள் என்பதனை வெளிப்படுத்தினார். அவர்கள் வீடுகளுக்குள் முடங்கி தங்கி வாழ்பவர்களாக காணப்படுவதாக குறிப்பிட்ட அவர், ஊடகங்களின் மூலமாக அவ்வாறான நபர்களுக்கு தொழில் மற்றும் சமூகத்தில் சம அவகாசங்களை பெற்றுக் கொள்வது தொடர்பாக நேர்முகமான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான கேந்திர மத்திய நிலையங்கள் முழு மாற்றுத்திறன் கொண்ட பிரஜைகளுக்கும் மிகவும் பிரயோசமானது என்றும் ரசான்ஜலி பதிரகே தெரிவித்தார்.

மாற்றுத்திறளாளிகள் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் குழு உறுப்பினர் ரயன் சுசந்த சைகை மொழியில் சபைக்கு தனது கருத்துக்களை தெரிவித்தார். அதனை சைகை மொழி பெயர்ப்பாளர் மொழி பெயர்த்து சபைக்கு தெரிவித்தமை நிகழ்வின் விசேட அம்சமாக காணப்பட்டது.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் பீ. விஜேவீர, மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ, மாற்றுத்திறளாளிகள் அமைப்புகளின் ஒன்றிணைந்த முன்னணியின் செயலாளர் குலரத்ன எதிரிசிங்க, பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரணசிங்க, இலங்கை இலத்திரனியல் வெளியீட்டாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் நுவன் லியனகே ஆகியோருடன் வெகுசன ஊடக அமைச்சினதும், அரசாங்க தகவல் திணைக்களத்தினதும் அதிகாரிகள், மாற்றுத்திறன் கொண்ட நபர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கொழும்பு 05, பொல்ஹேன்கொடை, கிருலப்பனை மாவத்தையில், இலக்கம் 163, அரசாங்க தகவல் திணைக்கள ஊடக மத்திய நிலைய கட்டிடத்தின் கீழ் மாடியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஊடக கேந்திர நிலையமானது மாற்றுத்திறன் கொண்டோர்களின் தேவைகளை இனங்கண்டு உரிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

adstudio.cloud