நாடளுமன்ற உறுப்பினர் கைது சிங்களபேரினவாத அரசாங்கம் எவ்வாறு அடக்குமுறைiயினை பிரயோகிக்கின்றது என்பதற்கு உதாரணம் – செல்வம் அடைக்கலநாதன்

238 0

ஐ. நா அமர்வுகள் நடக்கும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைதியான முறையில் நினைவஞ்சலியை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரின் அத்துமீறலும் கைது நடவடிக்கையும் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாத அரசானது எவ்வாறு அடக்குமுறையினை பிரயோகிக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு கடுமையான கண்டனங்கள். அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனுக்கு அகிம்சை வழியில் அஞ்சலி செலுத்துகையில் பொலிஸார் வன்முறையைப் பிரயோகித்து நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்துள்ளனர். இது நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறும் ஒரு செயலாகும்.

எமது உறவுகளை நினைவுகூருவதை அடக்குமுறையின் மூலம் தடுக்க முற்படுகின்றார்கள். ஐ. நா அமர்வுகள் நடக்கும் காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அமைதியான முறையில் நினைவஞ்சலியை மேற்கொண்டிருந்த வேளையில் பொலிஸாரின் அத்துமீறலும் கைது நடவடிக்கையும் தமிழ் மக்கள் மீது சிங்கள பேரினவாத அரசானது எவ்வாறு அடக்குமுறையினை பிரயோகிக்கிறது என்பதற்கு உதாரணமாகும். மிகக் கடுமையான கண்டனங்கள்.