நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு காவல்துறையினருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது

