இலங்கை கடற்படையின் தாக்குதலால் தங்கள் படகுகள், மீன்பிடி சாதனங்கள் சேதம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 300 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் வழக்கம்போல் பாக் ஜலசந்தி அருகே கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

