ரத்வத்த சம்பவம்: அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து கவலை எழுப்புகிறார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

175 0

சிறைச்சாலை முகாமைத்துவம், கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறை வளாகங்களுக்குள் போதையில் வலுக் கட்டாயமாக பிரவேசித்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பின்னரான நிகழ்வுகள் தொடர்பாக , இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டரில் பல கவலைகளையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

ரத்வத்தயின் நடத்தையால் பாதிக்கப்பட்ட கைதிகள் எவ்வாறு துரிதமாக அமைச்சர் ராஜபக்ஷவின் வருகை தொடர்பாக அழைப்பு விடுக்கும் செய்தியை அனுப்பக்கூடியதாக இருந்தது என்று அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வின் வருகை குறித்து சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களில் வெளிவந்திருந்த சம்பவங்கள் தொடர்பாக ராஜபக்ச ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் , இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கான ஒருவிதமான அங்கீகாரமாகவும் இது கருதப்படலாம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களை விடுவிப்பதற்கு அவர் பணியாற்றுவார் என்ற உறுதியளிப்பின் பிரகாரம் , பின்னர் அவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம், மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளால் தவறாக வழிநடத்தப்படக் கூடாது என்ற கோரிக்கையுடன், ராஜபக்ஷவின் வருகையானது முற்றிலும் ஒரு மக்கள் தொடர்பாடல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

கைதுகள், தடுப்புக்காவல் அல்லது குற்றப்பத்திரிகைகள் குறித்து முடிவெடுக்கும் அமைப்புகள் மீது அதிகாரம் இல்லாத ஓர் அமைச்சர் விடுதலை தொடர்பாக உறுதி அளிக்கிறார். அவர் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக எச்சரிக்கை செய்தார், அதன் மூலம் அவரது வருகையை அரசியல் ஆக்கியுள்ளதுடன் அதுவொரு பொதுமக்கள் தொடர்பாடல் நடவடிக்கையாகும். சம்பவத்தை கைதிகள் ஒரு பிரச்சினை யாக்காமலிருப்பதை ஊக்குவிப்ப தற்கானதாக தென்படுகிறது’ என்றும் அவர் கூறி யுள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு மற்றும் நாமல் ராஜபக்ஷவின் அறிக்கைகள் இதற்கு மாறாக இருந்த போதிலும்,இதற்கு அடுத்த நாள் ரத்வத்த இந்தச் சம்பவம் இடம்பெற்றி ருக்கவில்லை என்று மறுத்துள்ளாரென சற்குணநாதன் குறிப்பிடுகிறார்.

சிறைக்குள் நடக்கும் அனைத்து போதைப்பொருள் வியாபாரத்தையும் நிறுத்தியதால், இது அவருக்கு எதிரான சதி என்பதான ரத்வத்தயின் கூற்றுக்களை மறுக்கும் , முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் , சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கைப்பற்றப்படுதல் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் கைப்பற்றல்கள் சிறைக்குள் போதைப்பொருள் கடத்துவது தடுக்கப்படுவதாக அர்த்தமல்ல. மாறாக, இது போன்ற கைப்பற் றல்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றன. மேலும் சிறைக்கு போதைப்பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகின்றன என்பதற்கான சான்றுகளாக உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

கும்பலுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் வெளிப்படுத்த முடியாத தனித்தனி பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்ற ரத்வத்தயின் கூற்றுகள் தொடர்பாகவும் அவர் கவலை எழுப்பியுள்ளார்.

‘தனியான பகுதி’ அங்கீகரிக்கப்பட்ட, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட தடுப்புக்காவல் இடமாக இருக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் தனியாட்கள் அங்கீகரிக்கப்படாத தடுப்புக்காவல் இடங்களில் வைக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறியி ருக்கிறார்.

அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறை வளாகங்களில் சிசிடிவி கண்காணிப்பு விடயம் தொடர்பாகவும் மற்றொரு கேள்வி எழுப்பப்பட்டது.

“சிசிடிவியை நீக்க முடியாது என்று ரத்வத்த கூறுகிறார், ஆனால் வெலிக்கடை மற்றும் அனுராதபுரத்தில் சிசிடிவி பொருத்தப் படவில்லை” என்று சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

நாங்கள் வெலிக்கடைக்குச் சென்றபோது, சிறையின் வெளிப்புறப் பகுதிகளில் குறைந்தது 2 சிசிடிவி கமராக்களைப் பார்த்தது நினை விருக்கிறது. மேலும் வெலிக்கடை உட்பட கொழும்பு சிறைச்சாலைகளில் கமராக்களைப் பொருத்துவது ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், மற்றும் 2021 ஓகஸ்ட்டுக்குள் நிறைவடையும் என 2021 ஏப்ரலில் அரசாங்கம் அறிவித்தது. அது தொடங்கியிருந்தால், அதிக கைதிகளை கொண்ட சிறைச்சாலையான வெலிக்கடையில் ஏன் சிசிடிவி இல்லை?”என்று அவர் கேட்கிறார்.

2020 டிசம்பரில் இந்த அமைச்சுப் பதவிக்கு நியமிக்கப்பட்டதிலிருந்து எத்தனை முறை சோதனைக்காக அவர் சிறைச்சாலை களுக்கு சென்றிருந்தாரென ரத்வத்த மீது கேள்வியொன்றை சற்குணநாதன் விடுத்திருக்கிறார்.

– சன்டே மோர்னிங் –