தடுப்பூசிகள் ஏற்றுமதி என்ற இந்தியாவின் முடிவு வரவேற்கத்தக்கது – உலக சுகாதார அமைப்பு

162 0

உபரியாக இருக்கும் தடுப்பூசிகள் அடுத்த மாதம் முதல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமயத்தில், வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாலும், தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் இந்தியா தன்னிடம் உள்ள உபரி தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மான்சுக் மாண்ட்வியா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் செளமியா சுவாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், தடுப்பூசி ஏற்றுமதி அறிவிப்பை உலக சுகாதார நிறுவனம் வரவேற்கிறது. உலகளாவிய தடுப்பூசி வழங்கலில் சமநிலையை அடைய இது உதவும் என தெரிவித்துள்ளார்.