19ம் நாளாக தொடரும் அறவழிப்போராட்டம் .

473 0

தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் தமிழர்களுக்கு தமிழீழமே உறுதியான தீர்வு என்பதனையும் முன்னிறுத்தியும் மனித நேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களால் இன்று காலை ஆணையாளர் வதிவிடத்தின் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

சம நேரத்தில் மதிப்பிற்குரிய கெளரவ ஆணையாளர் அலுவலகத்தில் தமிழின அழிப்பில் பாதிக்கப்பட எம் உறவுகளின் சாட்சியங்களும் கையழிக்கப்பட்டு சிங்களப் பேரினவாத அரசினை வெகு விரைவாக காலதாமதமின்றி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என மனுவும் கையழித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று பி.ப 2:30 மணியளவில் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றதால் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் இணைந்து சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் தமிழர் எமக்கான உறுதியான தீர்வாக எம் தமிழீழத் தாயகத்தின் விடுதலையினை பெற்றெடுக்கவும் ஒன்றுகூடுவோம்.

“இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.