யேர்மனி வூப்பெற்றால் நகரிலும் வியசன் நகரிலும் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு.

502 0

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவாக, யேர்மன் வியர்சன் நகரமத்தியில் அங்காடிகள் அமைந்த நடைபாதையில் இன்று கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வை இடது சாரிக்கட்சியின் வியசன் பிராந்திய பொறுப்பாளர் திருமதி Britta Pietsch அவர்கள் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவருக்கு தீபமேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தி ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து யேர்மன்வாழ்
தமிழீழ மக்களும் இடது சாரிகட்சியின் உறுப்பினர்களும் மற்றும் ஏனைய பொதுமக்களும் தியாக தீபத்திற்கு தீபமேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள் இந்த நிகழ்வில்
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைகள், வலிந்து கணாமல் ஆக்கப்பட்டோர் போன்ற துண்டு பிரசுரங்களையும் யேர்மன் மக்களுக்கு வழங்கப்பட்டது.

வூப்பெற்றால் நகரமத்தியில் இடம்பெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு ஒழிப்படங்கள்.