அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்புவது ஆபத்தானது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

281 0

போர் குற்றத்தை நடத்தியதில் முக்கியமான நபராகவும்,குற்றவாளியாகும் இருக்கின்றவரே ஜனாதிபதியாக நாட்டை ஆட்சி செய்கின்ற காலகட்டத்தில்  இலங்கை அரசின் பொய்யான வாக்குறுதியை நம்பி இந்த தீர்மானத்தை  முழுமையாக முடக்கப்படும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டு இருக்கின்ற வரையில் பொறுப்புக்கூறல் என்ற விடயமே தமிழ் மக்களுக்கு சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.