அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும் – கஜேந்திரன்

12 0

அனுராதரபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை முழங்காலில் இருக்கச்செய்து அவர்களிற்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சரின் பதவியை பறிக்கவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.30 மணியளவில் அனுரதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முட்டுக்காலில் நிறுத்தி துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

தமிழர்கள் மீதான இனவெறியுடன் அமைச்சர் மேற்கொண்ட கொலை அச்சுறுத்தல் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவரது செயற்பாடுகளுக்காக இவரது பதவி பறிக்கப்படல் வேண்டும் என்பதுடன் இவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அனுரதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் பெரும் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளார்கள்.

உடனடியாக அவர்கள் தமது சிறையிலுள்ள தமது உறவினர்களை பார்வையிட உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.