தனிமைப்படுத்தல் ஊரடங்கால் 15ஆயிரம் பேருந்துகள் பழுது

272 0
தற்போது சுமார் 15ஆயிரம் தனியார் பேருந்துகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறுகையில்,
கொவிட் தொற்று காரணமாக பேருந்துகளை நீண்ட காலமாக பழுது பார்க்கவில்லை. அவற்றைச் சரி செய்ய வேண்டியிருந்தது. அரசாங்கம் தனியார் பேருந்துகளை சீரமைத்து ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
ஊரடங்கு உத்தரவை நீக்கினால் தனியார் பஸ்களை இயக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஊரடங்குச் சட்டம் காரணமாக அநேக பஸ் ஊழியர்கள் அதுபோல் தனியார் பஸ் உரிமையாளர்கள் எவ்வித வருமானமுமின்றி கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.