அஷ்ரபின் 21ஆவது வருட நினைவு தினம்

9 0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எம்.எச்.எம். அஷ்ரபின் 21ஆவது வருட நினைவு தினம், எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சுர் ஏ. காதிர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், காணொளி ஊடாக இந்நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம், சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், சட்டத்தரணி பரோஸா ஹுஸைன், இந்தியா – சென்னையை சேர்ந்த திரைப்பட நடிகர் வீ.ஐ.எஸ். ஜெயபாலன், சமூக செயற்பாட்டாளர் எம்.பௌசர், கவிஞர் நபீல், வைத்திய கலாநிதி தாஸிம் அஹமட் ஆகியோர் எம்.எச்.எம். அஷ்ரப் தொடர்பான கருத்துரைகளை இதில் முன்வைக்கவுள்ளனர்.