கோவில் வாசலில் உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா

154 0

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இருந்து யாழ். நகரை அண்மித்த கொட்டடி பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு வந்திருந்த நிலையில், கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

வல்வெட்டித்துறை – நெடியகாடு பகுதியை சேர்ந்த 68 வயதான ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா என்ற வயோதிப பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (12), கொட்டடியில் உள்ள கோவில்; ஒன்றுக்கு வந்திருந்த நிலையில், கோவில் வாசலில் திடீரென மயங்கி விழுந்து, உயிரிழந்தார்.

அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், நேற்று (13), அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு பகுதியில், 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சுகயீனம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (12), மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு, அங்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

 

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இதுவரை 16 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.