போதையில் சிறைக்கு சென்ற அமைச்சர்

28 0

தனது நண்பர்களுக்கு தூக்கு மேடையைக் காட்டுவதற்காக குடிபோதையில் இருந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் சிறைச்சாலை தலைமையகத்துக்குள் நுழைந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இராஜாங்க அமைச்சர் தனது கைத்துப்பாக்கி மற்றும் பல குடிபோதையில் இருந்த நண்பர்களுடன் கடந்த வாரம் சிறைக்குள் நுழைந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சரும் ஏனையவர்களும் அதிக போதையில் இருந்ததாலும் அவர்களில் இருவர் காற்சட்டை அணிந்திருந்ததாலும் சிறை அதிகாரிகள் அவர்களை சிறைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றும் அந்த குழுவினர், அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரியவருகிறது.

இந்த குழு சிறைச்சாலைக்குள் சிறிது நேரம் உலாவிய பின்னர் சிறையில் இருந்து தங்களது சொகுசு கார்களில் சென்றதாகவும் அறிய முடிகிறது.

இது போன்ற சம்பவம் தொடர்பில் தனக்கு தெரியாது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான (நிர்வாகம்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்பதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்றும் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.