யாழில் இதுவரையான கொரோனா பாதிப்பு விபரம்

30 0

யாழ்ப்பாணத்தில் தற்போது 5,414 குடும்பங்களைச் சேர்ந்த 15,888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா நிலைமையை அவதானிக்கும் போது நேற்றைய தினம் மாத்திரம் 76 கொரோனா தொற்றாளர்கள் யாழில் கண்டறியப்பட்டுள்ளனர்.

யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,255ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 320 ஆக கொரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 11,877 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது 5,414 குடும்பங்களைச் சேர்ந்த 15,888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

முதலாவது டோஸை 298,509 பேரும், இரண்டாவது டோஸை 239,976 பேரும் பெற்றுள்ளனர்.

இந்த காலகட்டத்தை மிக கவனமான பாதுகாப்பான சூழலை கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை தேவையற்ற ஒன்றுகூடல்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கும்படி நாங்கள் மீண்டும் பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம் என்கிறார்.