இலங்கையில் இதுவரை தடுப்பூசி பெற்றவர்களினதும் வழங்கப்பட்ட தடுப்பூசி வகைகளினதும் எண்ணிக்கை

137 0

நாட்டில் இதுவரையில் 10 ,579 ,220 பேருக்கு இரு கட்டங்களாக கொவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று 13 ,497 ,826 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 1.438 ,065 பேருக்கு முதற்கட்டமாகவும் 892,185 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று 10 ,697 ,335 பேருக்கு முதற்கட்டமாகவும் 8 ,647,025 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

159 ,089 பேருக்கு முதற்கட்டமாகவும் 43,450 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று 448 382 பேருக்கு முதற்கட்டமாகவும் , 240 569 பேருக்கு இரண்டாம் கட்டமாகவும் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

772 ,955 பேருக்கு முதற்கட்டமாகவும் , 755 ,991 இரண்டாம் கட்டமாகவும் மொlடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.