மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொண்டார் கணவன்

267 0

கொழும்பு, கெஸ்பேவ காவற்துறை பிரிவுக்குட்பட்ட மடபாத பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை வெட்டிக் கொலை செய்த பின்னர் தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பட்டுவந்தர, மடபாத பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தானும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குடும்பச் சண்டையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.