வவுனியாவில் 178 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

205 0

வவுனியாவில் கொரோனா தொற்று 178 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று (07) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனா தொற்று 178 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்கள் நேற்று 10 பேர் மரணமடைந்தனர்.

இதேவேளை நேற்றுமுன்தினம் (6) திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர்களது வீடுகளில் மரணமடைந்த 6பேரின் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு வெளியாகியது. அந்த வகையில் அவர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் நேற்று இரவு வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் மரணித்த 16 பேருடைய உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்யவும் சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.