சர்வதேச பங்களிப்பு அவசியம் – பிரித்தானியா வலியுறுத்தல்

352 0

united_kingdom_of_ireland_and_great_britain_by_greatpaperwolf-d7anmtxஇலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையின்கீழ் சமூகங்களுக்கு இடையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அந்த நாட்டின் பொதுநலவாய அலுவலக மற்றும் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வையர் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும், போர்க்குற்ற விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமில்லை என்று கூறிவருகின்றமை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றின்போதே அமைச்சர் இந்த பதிலை வழங்கினார்.
இலங்கையின் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் சர்வதேசத்துக்கு நம்பகத்தன்மையான நடைமுறையை காட்டவும் சர்வதேச பங்களிப்பு அவசியமாகும்.
எனவே இது தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துக்கு வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் ஸ்வையர் குறிப்பிட்டார்.
அத்துடன் இலங்கையின் போர்;க்குற்ற விசாரணைகள் சர்வதேச தரத்தில் அமையவேண்டும் என்பதில் பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிரி;த்தானியா தொடர்ந்தும் கோரிக்கைகளை விடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.