பூஸா சிறைச்சாலையில் கொவிட் நிலைமை தீவிரம்

299 0
பூஸா சிறையில் தனிமைப்படுத்தப்பட் 51 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் காலி மற்றும் களுத்துறை மாவட்ட நீதிமன்றங்களால் விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகளாவர்.
நேற்று நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையிலேயே தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 34 கைதிகள் அங்குணுகொல பெலஸ்ஸ சிகிச்சை நிலையத்துக்கும் மீதமுள்ள 17 பேரும் பூசா சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சிறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கை இதுவரை 768ஆக உயர்ந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.