மட்டக்களப்பில் தமிழர் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி மக்களை காப்பாற்ற முன்வரவேண்டும்- ஞானமுத்து சிறிநேசன்

230 0
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேச்சல்தரை உட்பட பல இடங்களில் உள்ள நிலங்கள் கலாச்சாரம் , தொல்லியல் நிலையங்கள் என தமிழ் மக்களுடைய நிலங்கள் ஆக்கரமிக்கப்படுகின்றது எனவே ஆளும் கட்சியிலுள்ள இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் வாயை மூடிக் கொண்டிராது அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முன்வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மேச்சல்தரை பகுதியான மயிலத்தமடு பகுதியில் அம்பாறை, பொலன்றுவை மாவட்டங்களிலிருந்து வந்வர்கள் வெளியேறாமல் மீண்டும் பயிர் செய்துகொண்டு, எமது பண்ணையாளர்களின் கால்நடைகளை தாக்கி வருகின்றார்கள்
தமிழ் தேசிய கூட்டமைப்பும் மனித உரிமை அமைப்புக்களும் இதற்காக பல்வேறு பட்ட எதிர் நடவடிக்கைகளை மேற்கொண்டனா.; இதன் பிரதிபலிப்பாக பாராளுமன்ற உறுப்பினரர்களான இரா. சாணக்கியன், கோ.கருணாகரன் வழக்காளிகளாக சட்டத்தரணியும்; பாராளுமன்ற உறுப்பிருமான சுமந்திரன் வழக்கு தாக்குதல் செய்திருந்தார்.
இதன்போது மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் இந்த மேச்சல்தரை பகுதியில் அம்பாறை. பொலநறுவை மாவட்டங்களில் இருந்து தற்காலிகமாக பயிர் செய்கை செய்ய வந்துள்ளனர் இந்த பயிர்கள் அறுவடை முடிந்ததும் ஏப்பிரல் மாதத்தில் அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என நீதிமன்றில் உத்தரவாதம் அதரிவித்தனர்.
அந்த அடிப்படையில் அறுவடை முடிந்துள்ளது ஆனால் அவர்கள் முற்று முழுதாக அங்கிருந்து வெளியேறவில்லை தற்போதுகூட வெளிமாவட்டங்களில் இருந்துவந்த குடியேறிகள் 40 பேர்வரை 100 ஏக்கர் நிலப்பரப்பில் இப்போதும் அவர்கள் மீண்டும் பயிர் செய்துள்ளனர்.
அதேவேளை பண்ணையாளர்களின் கால்நடைகளை தாக்கிவருகின்றனர் 3 மாதத்தில் 10 மேற்பட்ட கால்நடைகள் சுடப்பட்டுள்ளன இது தொடர்பாக கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றால் அவர்கள் அதனை உதாசீனம் செய்துவருகின்றதுடன் அவர்களும் அதற்கு ஆதரவாக செயற்படுகின்ற செயற்பாட்டை பார்க்ககூடியதாக இருக்கின்றது
எனவே நாங்கள் பாரம்பரியமாக செய்துந்த தொழில்களை எங்களால் செய்யமுடியாதளவு நெருக்கடிகள் வருகின்ற சூழலில் இந்த ஆளும் கட்சியில் பங்காளிகள் அபிவிரித்திக்குழு தலைவர்கள் என்றும் செல்லிக் கொண்டிருக்கின்றவர்கள் அந்த பக்கமே போகின்றார்கள் இல்லை
அவர்களுடைய கஷ;டங்கள் நஷ;டங்கள் பற்றி சிந்திக்கின்றார்கள் இல்லை ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு மாற்று கருத்தை தெரிவித்து பூசி மெழுகிவருகின்றதுடன் குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று ஒரு குறுகிய பகுதியில் வீதிபோடுவதும் கிறவல் போடுவதுமாக அவர்களது செயற்பாடு இருக்கின்றது
ஆகவே நீங்கள் வாலை மூடிக் கொண்டிருந்தால் துதிபாடுகின்றீர்கள் பங்காளிகட்சிகள் என்கிறீர்கள் 20 திருத்தத்திதம் துறைமுக ஆணைத் திட்டம், உட்பட எல்லா திட்டங்கள் திருத்தசட்டங்களுக்கு கையை உயர்த்துகின்றீர்கள் இவ்வாறு இந்த மாகாணசபை மாற்றம் வந்தாலும் கூட சரணாகதியில் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கப் போகின்றீர்களா? எனவே இரு ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும்; அரசாங்கம் செய்யும் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.