பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு புதிய நியமனம்

257 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை தொடர்பில் குற்றவாளியாக இனம் காணப்பட்ட துமிந்த சில்வாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து, ஜனாதிபதியின் செயலாளர் துமிந்த சில்வாவை தேசிய வீட்மைப்பு அதிகாரசபையின் தலைவராக நியமித்து அனுப்பிய கடிதத்தை கொழும்பு ஆங்கில ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.