சீனாவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

262 0

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடை விதிக்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரசானது சீனாவில் பரவத் தொடங்கி இருந்தாலும், கட்டுப்பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அந்நாடு அதனை கட்டுப்படுத்தியது. இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதிக்குள் சுக்சியாங் நகர மக்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.