மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த படகில் பதிவு இலக்கம், உரிமையாளர் பெயர் என எதுவுமே பொறிக்கப்படாத நிலையில் சிறிய உடைவுகளுடன் கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த படகு காற்றின் வேகம் காரணமாக கரையொதுங்கியுள்ளதா அல்லது சட்ட விரோத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு கைவிடப்படுள்ளதா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


