முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது.
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் கணிப்பொறியியல் மாணவர் மயூர். முகநூல் நிறுவனம் தங்கள் தளங்களில் இருக்கும் பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்திருந்தது. அதில் பங்கேற்ற மயூர், இன்ஸ்டாகிராமில் தனியாக கணக்கு வைத்திருந்தாலும் கூட, அதிலுள்ள ஒரு பிழை, எவரை வேண்டுமானாலும் தவறாக நுழைய அனுமதித்து பயனர்களின் புகைப்படங்கள், கதைகள், ரீல்ஸ் ஆகியவற்றை பார்க்க வைக்கிறது என்ற தொழில்நுட்ப குறைபாட்டை கண்டுபிடித்தார்.

