யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேர் உட்பட வடக்கில் நேற்று 37 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் உட்பட 601 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.
அவற்றில் தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த 14 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஆனைவிழுந்தானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பேரும், பெரியகாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இருவரும் தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை விடவும் வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் விபரம் வருமாறு:-
கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேர்
——————————————–
கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை யில் ஒருவர்
யாழ்.மாவட்டத்தில் 12 பேர்
———————————–
யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்தியசாலையில் 02 பேர்
வவுனியா மாவட்டத்தில் 03 பேர்
—————————————–
பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவர்
————————————————
மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவர்,வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்.

