அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகங்கள் – ஜனாதிபதி

372 0

mythiribala 6666sதனியார் ஊடக நிறுவனங்களில் ஒலிபரப்பாகும் செய்தி அறிக்கைகளின் போது, அதிக நேரம் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தொலை தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தனியார் ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு 80 சதவீதமான காலம் ஒதுக்கப்படுகிறது.அரசாங்கத்தை விமர்சிப்பதால் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை.ஆனால் அது நியாயமானதாக அமைய வேண்டும்.எனினும் அரசாங்கத்தின் அபிவிருத்தி மற்றும் நற்செயற்படுகளுக்கான செய்திகளுக்காக 20 சதவீத நேரம் மாத்திரமே ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதில்லை என்ற மனப்பாங்கு நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.