ஜெர்மனியில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியது

310 0

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.18 லட்சத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 கோடியை தாண்டியது. அவர்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா-வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி 11-வது இடத்தில் உள்ளது